கவிதை போட்டி
தலைப்பு:
குழந்தைகள்(வயது 13 முதல் 17 வரை):
1) பட்டாம் பூச்சியாய் எமைப் பறக்க விடுங்கள்.
2) தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
பெரியோர்:
1) அறம் காத்த மறத்தமிழர் எங்கே?
2) அமைதிப் பூங்காவாய் ஆகட்டும் இவ்வுலகு!
விதிமுறைகள்:
- அனைத்து போட்டியாளர்களும் தங்கள் கவிதையின் இரு அச்சுப்பிரதிகளை நடுவர் குழுவிடம் போட்டியின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
- சமர்பிக்கும் கவிதை தங்களுடைய சொந்த கவிதையாயிருத்தல் வேண்டும்.
- விளக்கம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
- சமர்பிக்கும் கவிதை இதற்கு முன்பு எந்த ஒரு நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ அல்லது இணையதளத்திலோ வெளியிட்டிருத்தல் கூடாது.
- படைப்புகள் கலப்படமில்லாத தமிழில் இருக்க வேண்டும் , இழிவான சொற்களை தவிர்க்க வேண்டும்
- குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள்
- அதிகபட்ச கவிதை வரிகள் : முப்பது வரிகள்
- இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பின்பற்றுவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.
- நேரம்: 3 நிமிடங்களுக்கு மிகாமல்
பேச்சுப் போட்டி
தலைப்பு:
சிறுவர்கள்(வயது 10 முதல் 14 வரை):
1) இயற்கையோடு வாழ்வோம்
2) தாய்மொழியின் அவசியம்
பதின்பருத்தினர்(வயது 15 முதல் 17 வரை)
1) நீரின்றி அமையாதுலகு
2) எங்கள் இளைஞர்களின் மீது சமூக ஊடகத்தின் தாக்கம்
இளைஞர்/பெரியோர் அல்லது பொதுப்பிரிவு(வயது 18 க்கு மேல்)
1) தமிழர் அறமும் வீரமும்
2) தமிழும் அறிவியலும்
விதிமுறைகள்:
- பிறமொழிச் சொற்கள் தவிர்த்தல்
- தலைப்பை ஒட்டி பேச வேண்டும்
- வார்த்தை உச்சரிப்பு
- தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு
- உடல்மொழி
- பழமொழிகள், செய்யுள், இலக்கியப் பாடல்கள் மேற்கோள் காட்டிப் பேசினால் கூடுதல் மதிப்பெண் தரலாம்
- பெற்றோர்கள்/நண்பர்கள் பின்னால் இருந்து உதவக் கூடாது.
- சிறுவர்கள்(வயது 10 முதல் 14 வரை) - 3 நிமிடம்
- பதின்பருத்தினர்(வயது 15 முதல் 17 வரை) - 5 நிமிடம்
- இளைஞர்/பெரியோர் அல்லது பொதுப்பிரிவு(வயது 18 க்கு மேல்)- 5 நிமிடம்
திருக்குறள் போட்டி
பிரிவு:
1) 7 வயது வரை - அதிகபட்சம் 10 குறள்கள்
2) வயது 8 முதல் 12 வரை- அதிகபட்சம் 15 குறள்கள்
விதிமுறைகள்:
- சிறுவர்கள் 7 வயது வரை- 5 நிமிடங்கள்
- சிறுவர்கள் வயது 8 முதல் 12 வரை - 7 நிமிடங்கள்
- அனைத்து போட்டியாளர்களும் தாங்கள் ஆயத்தமான திருக்குறள் பட்டியலின் இரு அச்சுப்பிரதிகளை நடுவர் குழுவிடம் போட்டியின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
- போட்டியாளர்கள் குறளை ஓதும்போது பரிந்துரை செய்யவோ/பேசவோ அல்லது உதவி பெறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- பெற்றோர்கள் போட்டி நேரத்தில் குழந்தைகளுக்கு உதவக்கூடாது.
- நடுவர் முடிவுகளே இறுதியானவை.
- நினைவாற்றல் –தெளிவான உச்சரிப்பு இல்லாவிட்டாலும், நினைவாற்றல் நன்றாக இருந்தால் முழு புள்ளிகள் வழங்கப்படும்.
- உச்சரிப்பு - சரியாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
- தெளிவு - வார்த்தைகள் தெளிவாக, புரியும்படி உரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- வெளிப்பாடு - உரைசொல்லும் திறமையை வெளிப்படுத்தும் முறையில் மதிப்பீடு செய்யப்படும்.
- பொருள் விளக்கம் - குறளின் பொருள் தெளிவாகவும் சரியாகவும் விளக்கப்பட்டால் மதிப்பெண்கள் வழங்கப்படும்.